சினிமா செய்திகள்
யுவன் சங்கர் ராஜாவை மேஸ்ட்ரோ என புகழ்ந்த செல்வராகவன்
சினிமா செய்திகள்

யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்த செல்வராகவன்

தினத்தந்தி
|
14 Sept 2022 2:41 AM IST

‘நானே வருவேன்’ திரைப்படத்தின் பின்னனி இசைக் கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னை,

தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வரும் 15-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 'நானே வருவேன்' திரைப்படத்தின் பின்னனி இசைக் கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதற்கான பணிகளில் யுவன் சங்கர் ராஜா தீவிரம் காட்டி வருவதாக தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள செல்வராகவன், யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்ததோடு, அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியானது என தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்